Saturday, August 26, 2006

Maran vs Yechury

தொலைத்தொடர்புத் துறையின் விரிவாக்கத் திட்டங்கள் தாமதப்படுவது தொடர்பாக, வியாழக்கிழமை அன்று, ராஜ்யசபையில், அமைச்சர் தயாநிதி மாறனுக்கும், CPI(M) தலைவர் சீதாராம் யெச்சூரிக்கும் பலத்த வாக்குவாதம் நடந்தது ! அப்போது மன்மோகன்சிங்கும் அவையில் இருந்தார்.

தனியார் சேவையை ஒப்பிட்டு, BSNL மற்றும் MTNL ஆகியவற்றின் உருப்படியில்லாத சேவை பற்றி பல உறுப்பினர்கள் கேள்வி நேரத்தின் போது கவன ஈர்ப்பு எடுத்து வந்த போது, யெச்சூரி, தனியார் நிறுவனங்கள் லாபம் அடைவதற்காக, BSNL/MTNL நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்கான டவர்கள் நிறுவும் பணி வேண்டுமென்றே (deliberately) நடைபெறாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார் !

துள்ளியெழுந்த அமைச்சர், அத்தகவல் தவறு என்றும், யெச்சூரியின் பேச்சு அரசுப் பணியாளர்களை சோர்வடையச் செய்யும் வகையில் உள்ளதாகவும் பதிலுரைத்தார் ! யெச்சூரி, தான் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்றும், தாங்கள் தான் தொலைத் தொடர்பு யூனியன்களை நடத்துவதாகவும், தான் கேட்டது, சில யூனியன்கள் தன்னிடம் முன் வைத்த புகாரை வைத்து தான் என்றும் கூறினார்.

திரு.மாறன் யெச்சூரி தான் கூறியதை எழுத்து வடிவில் (!) தர இயலுமா என்றும், தான் (மாறன்) பேசியதை யெச்சூரி காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் சூடாகப் பேசினார் என்று தெரிகிறது. கடுப்பான யெச்சூரி, கேள்வி நேரம் முழுவதும் தான் அவையில் இருந்து கவனித்ததாகவும், அமைச்சரின் இத்தகைய மரியாதைக் குறைவான போக்கு சரியில்லை என்றார் !! உடன் இருந்த பிருந்தா கரத், " என்ன இது ? அமைச்சர் ஏன் இப்படி கூச்சலிடுகிறார் ?" என்று கூறினார் !!!

இந்த ரகளைக்குப் பின் யூனியன்கள் யெச்சூரிக்கு அளித்த தகவல்களை, தனக்குத் தெரியப்படுத்தினால், தான் அவை குறித்து விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்று யெச்சூரிக்கு அமைச்சர் கடிதம் ஒன்று எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

சில மாதங்களுக்கு முன், டாடாவை (யே!) மிரட்டினார் என்று ஒரு பிரச்சினை ! இப்போது இது ! நல்ல வேளை, யெச்சூரியை 'ஒண்டிக்கு ஒண்டி' வருமாறு அழைக்காமல் விட்டாரே ;-) யெச்சூரி வைகோ அல்லர் ! CPI(M)யை ஓவராக வெறுப்பேற்றினால், மத்திய அரசு கவிழும் அபாயம் உள்ளது ! அதனால், தாத்தா வாங்கித் தந்த அமைச்சர் பதவியும் பறி போகும் ! அப்படி, மத்தியில் ஆட்சி கலைய திமுக அமைச்சர் ஒருவர் காரணமாகி விட்டால், கலைஞர் அரசுக்கும் ஆபத்து தானே ! இன்னொரு தேர்தல் (அதற்கான பெரும் செலவு!) தற்போது நிச்சயம் தேவையற்ற ஒன்று தானே !

என்றென்றும் அன்புடன்
பாலா

9 மறுமொழிகள்:

dondu(#11168674346665545885) said...

"அதனால், தாத்தா வாங்கித் தந்த அமைச்சர் பதவியும் பறி போகும் !"
தாத்தாவின் கோபத்துக்கும் ஆளாக வேண்டியிருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

Thanks, Dondu Raghavan.

Muthu said...

உண்மைதான்...தன் துறையைப்பற்றி பெசியதால் அய்யா உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் என்று தோன்றுகிறது.

மற்றபடி ஆட்சி கவிழுவேண்டும் என்ற உங்கள் உள்மனகிடக்கை எல்லாம் அவ்வளவு சுலபமாக நிறைவெறாது சார்..:))

enRenRum-anbudan.BALA said...

Muthu,
Thanks.
//மற்றபடி ஆட்சி கவிழுவேண்டும் என்ற உங்கள் உள்மனகிடக்கை எல்லாம் அவ்வளவு சுலபமாக நிறைவெறாது சார்..:))
//
I strongly object to this statement that cast aspersions on my great INTEGRITY :))))))

ச.சங்கர் said...

அட...விடுங்க தமிழ் நாட்டுலேருந்து ஒரு ஏழெட்டு பேர் (இல்லை ஜாஸ்தியா)...அமைச்சருங்களா மத்தியில இருக்காங்கா..என்ன பண்றாங்கன்னு சத்தமே காணோம்..தயாநிதி மற்றும் அன்புமணி மாதிரி ஒண்ணு ரெண்டு பேராவது தாத்தா மற்றும் அப்பாவின் செல்வாக்கில் (தத்து பித்துன்னாவது) பேசி இருக்குறத காட்டிக்கிறாங்கன்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான் :))) இதெல்லாம் ஒரு மேட்டர்ன்னு வந்துட்டீங்களே....

enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

***********
CT,
கருத்துக்களுக்கு நன்றி !
///maran thatha is rich enough to get cabinet minister post
//
if only I had a grand father like that !!!

வணக்கத்துடன்,
கருத்துக்களுக்கு நன்றி !
//அடுத்த தடவை சோனியாகிட்ட மோதியோ வேறு எப்படியோ கருணாநிதிக்கு ஆப்பு வைப்பாரா பாக்கலாம்..எதோ ரூபத்தில நல்லது நடந்தா சரிதான்.

//
நான் இந்த விளையாட்டுக்கு வரலை ! முத்து (தமிழினி) கிட்ட மாட்ட விரும்பலை ;-)

விசித்திரகுப்தன்,
கருத்துக்களுக்கு நன்றி !
//இதெல்லாம் ஒரு மேட்டர்ன்னு வந்துட்டீங்களே....

//
அப்படியா சொல்றீங்க :)
எ.அ.பாலா

said...

//நல்ல வேளை, யெச்சூரியை 'ஒண்டிக்கு ஒண்டி' வருமாறு அழைக்காமல் விட்டாரே ;-) யெச்சூரி வைகோ அல்லர் !
//
:)))))))))))))

enRenRum-anbudan.BALA said...

Anonymous,
நன்றி !

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails